Posts by: Pravin

Kishore-Kumar

கிஷோர் குமார்

- - Comments

இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 04, 1929 இடம்: கந்த்வா, இந்தியா பணி:...

Kalpana-Chawla

கல்பனா சாவ்லா

- - Comments

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக்...

Jayalalitha

ஜெயலலிதா ஜெயராம்

- - Comments

ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவரான...

E-V-Ramasamy

ஈ. வெ. ராமசாமி

- - Comments

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு...

Balamurali-Krishna

பாலமுரளிகிருஷ்ணா

- - Comments

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், ஆந்தர மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வாழும் ஒரு கர்நாடக இசைக் கலைஞராவார். இவர் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த பாடல் இயற்றுநர் மற்றும் மாபெரும் இசைக்கருவி வல்லுனரும் ஆவார். “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” மற்றும் “சங்கீத கலாநிதி” போன்ற இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்று, சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக விளங்கும்பாலமுரளிகிருஷ்ணா தன்னுடைய வசீகரக்குரலால் சிறு வயதிலேயே இசைமேதை என புகழப்பட்டார். இப்படிப்பட்ட...

Asha-Bhosle

ஆஷா போஸ்லே

- - Comments

ஆஷா போஸ்லே அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின் சகோதிரியாவார். இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல அந்நிய மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இரண்டு தேசிய விருதுகளும், ஒன்பதுக்கும் மேற்பட்ட ஃபிலிம்பேர் விருதுகளும்,...

Abdul Kalam

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

- - Comments

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015...

Hemamalini

ஹேமமாலினி

- - Comments

இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து, இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய அவர், பரதநாட்டிய கலையிலும் சிறந்து விளங்கினார். அனந்தசாமி தயாரித்த “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பல ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக வளம்வந்த ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை...

Mammootty

மம்முட்டி

- - Comments

‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை  மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல...

N.T.Rama-Rao

என். டி. ராமா ராவ்

- - Comments

இந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும்,  அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும்...