Posts by: Pravin

Shahrukh-Khan

ஷாருக்கான்

- - Comments

‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ...

Harivansh-Rai-Bachchan

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

- - Comments

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது. மேலும் “சோவியத்...

PB_Sreenivas

பி. பி. ஸ்ரீனிவாஸ்

- - Comments

பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். தன்னுடைய வசீகரப் பாடல் வரிகளில் இனிமையைக் கூட்டி, ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் என 12 மொழிகளில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் தன்னுடைய இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்றப் பாடல்களைப்...

Manoj_Kumar

மனோஜ் குமார்

- - Comments

மனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை கருப்பொருளாக கொண்டு பல படங்கள் இயக்கி நடித்ததால், அவர் “திரு பாரத்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் திரைப்படத்துறையில் உயரிய விருதான “தேசிய திரைப்பட விருது” என மேலும் பல விருதுகளை பெற்று, இந்திய திரைப்படத்துறையில் இன்றளவும் சிறந்து...

Dhirubhai-Ambani

திருபாய் அம்பானி

- - Comments

‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில்,...

Bharathiraja

பாரதிராஜா

- - Comments

“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று  மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற...

Vadivelu

வடிவேலு

- - Comments

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி...

Soundarapandian-Nadar

சௌந்தரபாண்டியன் நாடார்

- - Comments

பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார். நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின்...

Ajit

அஜித் குமார் (நடிகர்)

- - Comments

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து,...

Actor-Dhanush

தனுஷ் (நடிகர்)

- - Comments

‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக...