Posts by: Pravin

N_Ravikiran

என். ரவிக்கிரன்

- - Comments

என். ரவிக்கிரன் அவர்கள், புகழ்பெற்ற சித்திர வீணைக் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறப்பு பெற்று விளங்கியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பும், இசைத் தேடலில் அவர் மேற்கொண்ட யுத்திகளும், அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றதோடு மட்டுமல்லாமல், இசை உலகில் “சங்கீத சாம்ராட்” எனவும் பெயர் பெறச் செய்தது. இவர், கோட்டு வாத்தியக் இசைக் கலைஞர் அமரர் நாராயண அய்யங்காரின் பேரன் ஆவார். தன்னுடைய அற்புதமான வாசிப்பால்...

Sujatha_Mohan

சுஜாதா மோகன் (பாடகி)

- - Comments

சுஜாதா மோகன் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையானக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’ மற்றும் ‘இந்தி’ என அனைத்து மொழிகளிலும் சுமார் 4000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ‘புது வெள்ளை மழை’, ‘காதல் ரோஜாவே’, ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘ஆத்தங்கரை மரமே’, ‘பூ பூக்கும் ஓசை’, ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’, ‘உன் சமையலறையில்’,...

Surya

சூர்யா (நடிகர்)

- - Comments

எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட...

Nithyashree

நித்யஸ்ரீ மகாதேவன்

- - Comments

கர்நாடக இசையின் ஜாம்பவான்களும், சங்கீதக் கலை வல்லுனர்களும் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்து, இசையென்னும் காற்றை சுவாசித்து, வளர்ந்து, தனது 16வது வயதிலேயே இசைக் கச்சேரியை அரங்கேற்றியவர், நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தி, தமிழ் இசையின் பெருமையைப் பரப்பியவர். கர்நாடக சங்கீத...

Kambar

கம்பர்

- - Comments

“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர்,...

Kavita-krishnamurthy

கவிதா கிருஷ்ணமூர்த்தி

- - Comments

பாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக் கொடுக்காமல், பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களை தனது குரலில் பாடி இசையுலகில் முத்திரைப் பதித்தவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதினை’ வென்ற இவர், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறை பெற்றவர். அது மட்டுமல்லாமல், திரையுலகில்...

Kovai-Sarala

கோவை சரளா

- - Comments

நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’...

Rettamalai-Srinivasan

இரட்டமலை சீனிவாசன்

- - Comments

மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, தலித் ஆர்வலர்,  சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தலித் இனத்தை சார்ந்த மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளி...

Rani-Lakshmi-Bai

ராணி லக்ஷ்மி பாய்

- - Comments

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: 19 நவம்பர் 1828 பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா ...

S-Srinivasa-Iyengar

எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார்

- - Comments

சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாண வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவுகம், “இந்திய தேசிய காங்கிரஸ்” மற்றும் “சுயராஜ்ஜிய கட்சியின்” தலைவராகவும் பணியாற்றிய அவர், ‘தென்னாட்டு சிங்கம்’ என அனைவராலும் போற்றப்படுகிறார். வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று பல பணிகளை சிறப்பாக செய்த எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை...