ஜெயலலிதா ஜெயராம்

Jayalalitha

ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவரான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாக காண்போம்.

பிறப்பு: 24 பிப்ரவரி 1948

பிறந்த இடம்: மைசூர், இந்தியா

தொழில் துறை: நடிகை மற்றும் அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை:

‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.

 சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.

தொழில்:

ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான  “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.

அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி,  இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும்,  அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

பங்களிப்புகள்:

அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

விருதுகள்

  • ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.
  • ‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு  சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
  • தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.
  • சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.
  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.
  • சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.

காலவரிசை

1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.

1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.

1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.

1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.

1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.

2011: தற்போது தமிழக முதல்வராக பணியாற்றுகிறார்.

Comments

  1. S.karthikeyan of adyar says:

    Aiadmk govt. offers good administration and corruption free govt.run by puratchi thalaivi amma.please use this features and comparative study with the past dmk govt. as election strategy in the upcoming lok sabha elections.The defamation case dt 4.10.13 Mr.M.K.Stalin of dmk filed against our Mayor lacks facts or proof may be Mr.Stalin is giving aiadmk the opportunity to expose his corruption to court and to public,its like falling into his own trap by Mr.Stalin.
    respects,
    S.karthikeyan of adyar

  2. suresh says:

    Super

  3. R.SENTHILRAJAN says:

    I’M VERY MUCH PROUD TO SAY THAT I’M ALSO LIVING IN THE GOLDEN PERIODS OF OUR “AMMA”.THANKYOU FOR GIVING THIS OPPURTUNITY TO ME. by R.SENTHILRAJAN.TRICHY

  4. Boopalan.T says:

    AMMA IS GREAT